ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதாகவும், இதனை பிரியாணி கடைகள், உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் பயன்படுத்துவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் வெங்கட்டலட்சுமணன், சுகாதார ஆய்வாளர் சத்திய மூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் சோதனை செய்தனர்.
2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தனர். இதுபோன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.