நெமிலியை அடுத்த நெடும்புலி ஊராட்சியில் உள்ள வி. ஐ. பி. நகரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றத்தலைவர் மாறன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் கலந்துகொண்டவர்களுக்கு மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. நெமிலி பேரூர் மகளிரணி, தொண்டரணி அமைப்பாளர் உமாவதி கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.