நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலாந்துறை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து சில ஆண்டுகள் அவை பயன்பாட்டில் இருந்தது. இந்தநிலையில் தற்போது அந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் மூடியே கிடக் கிறது. மேலும் கட்டிடத்தில் செடி, கொடிகளும் புதர்போல் மண்டி கிடக்கிறது. தொடர்ந்து அரச மரம் கட்டிடத்தில் வளர்வதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை திறந்து புதர் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் வீணாக கிடைப்பதை விட மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.