நெமிலி அருகே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்!

66பார்த்தது
நெமிலி அருகே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்!
நெமிலி அருகே பள்ளூரில் உள்ள ரெயில் நிலையம் அருகே பனப்பாக்கம் செல்லும் சாலையில் அரக்கோணம்-காஞ்சீபுரம் செல்லும் ரெயில்பாதை உள்ளது. இதன் கீழே சுரங்கப்பாதை உள்ளது.

இந்த வழியே தினமும் பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங் கள் செல்கின்றன. மேலும் சுரங்கப்பாதை வழியே பனப்பாக்கம், திருமால்பூர், கீழ்வெண் பாக்கம், ஜாகீர் தண்டலம், நெல்வாய், சயனபு ரம், மேலபுலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை, பள்ளி, கல்லூரி, மருத்துவம னைக்கு என காஞ்சீபுரம், அரக்கோணம் சென்னை பகுதிகளுக்கு பஸ் மற்றும் ரயில் மூலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இப்பகு தியில் மழை பெய்ததால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.

தேங்கிய மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாததால் வாகனங்கள் மழைநீரில் செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியும், நோய் பரப்பும் கொசுவும் உற்பத்தியாகி வருகிறது. இதனால் நடந்து செல்லும் பொது மக்களும், வாகன ஒட்டிகளுக்கும் மிகவும் அவதிப்பட்டு வருகிறது.

எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக் கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி