நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பை தண்டலம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. இங்கு ஈன்ற பெண்டை, பல்ஜி கண்டிகை, ஆதிதிராவிடர் காலனி, நாயுடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளி லிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனையும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கும் பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப் பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது துணை சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தும், கட்டிடங்களில் பல இடங்களில் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது.
மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
அவ்வப்போது அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக் கள் வருவதால் கர்ப்பிணிகள், நோயாளிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர். கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.