ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு இணைய வழி பட்டா வழங்க முன்மொழிவு அனுப்பும் பொருட்டு நில அளவையர் மூலம் அளவீடு பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பட்டா வழங்கிய ஐந்து நபர்களும் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கிறார்களா என்று நில அளவையர் கேட்டறிந்தார். மேலும் அரசு வழங்கிய இடம் அளவீடு செய்யப்பட்டது.