ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உரிய நேரத்தில் திறக்க வேண்டும், சரியான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு பணத்தை தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.