ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது என்று சில மாணவர்களை எழுப்பி பாடம் தொடர்பான கேள்விகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார். பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்றும் கேட்டறிந்தார்.