ஆற்காடு தாலுகாவில் வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தில் 19-ந் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியர் உள்பட மாவட்ட நிலையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு அரசு திட்டப்பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், ரேஷன் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் 19-ந் தேதி அன்று நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
முகாமில் ஆற்காடு தாலுகாவைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.