வாலாஜாபாத் தாலுகாவில் இயங்கி வந்த தனியார் சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட சங்கரன்பாடி, களத்தூர், பெரும்புலிபாக்கம், அவளூர், பொய்கைநல்லூர், மகேந்திரவாடி, கோடம்பாக்கம், பெரப்பேரி ஆகிய கிராமங்கள் தற்காலிகமாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, சர்க்கரைத்துறை இயக்குனரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் 2024-25-ம் ஆண்டு நடவு பருவத்திற்கு கரும்பு நடவு செய்திடவும், அரசு அறிவித்துள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருபருகரனை நடவு செய்யும் விவசாயிக ளுக்கு ஒரு எக்டருக்கு ரூ. 3, 750, ஒரு பருசீவல் நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு 50 சதவீதம் ரூ. 12, 500 மானியம் வழங்கப்படுகிறது.
கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கரும்பு நடவு செய்த மூன்று மாதத்தில் மண் அணைக்கவும், 5முதல் 7-வது மாதங்களில் சோகை உரித்து விட்டம் கட்ட வேண்டும். மேலும் விவசாயிகள் இது தொடர்பாக காவேரிப்பாக்கம் கோட்ட கரும்பு அலுவலர் பூவேந்தி ரபிரபு என்பவரை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் என வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் கே. நர்மதா தெரிவித்துள்ளார்.