ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் நடைபெற்றது. தற்போது கல்லூரியில் 6-ம் பருவம் படிக்கும் மாணவர்களுக்கு வீல்ஸ் இந்தியா தனியார் நிறுவனம் மூலம் வளாக நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் டி. தரணிபதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ்நாராயணன் வரவேற்று பேசினார்.
வளாக நேர்காணலில் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் குப்புசாமி, செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ரமேஷ் மற்றும் இயக்குனர்கள் சங்கர், ஆதிகேசவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இயக்குனர்கள் மானக்சந், கருணாகரன், மோகன்குமார், ஆசிநாதன் மற்றும் துளசி பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.