நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7-ந் தேதி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சாப்ட் டென்னிஸ் போட்டியில் சாதனை புரிந்த ஆற்காடு குளோபல் பப்ளிக் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் கே. ஆர். சஞ்சய்க்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பரிசு பெற்ற மாணவனை பள்ளியின் கல்விக்குழும தலைவர் ஹேமபிரசாத், தாளாளர் ராமபிரசாத் வேதுல்லா, பள்ளி நிர்வாக இயக்குனர்கள் சுஹாஸ் வேதுல்லா, அனிஸ், தீக்ஷா அனிஸ், பள்ளியின் டீன் ஜோசப், முதல்வர் பா. சிவசுப்ரமணியம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அப்துல் கரீம், அஜித் குமார் ஆகியோர் வாழ்த்தினர்.