ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் "சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசரநிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுப்பார்கள்" எனவே பொதுமக்கள் ஆன்லைன் நண்பர் கோரிக்கையை ஏற்கும் போது கவனமாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது