திமிரி பெருமாள் கோவில் புரட்டாசி மாதம் சிறப்பு பூஜை!

282பார்த்தது
திமிரி பெருமாள் கோவில் புரட்டாசி மாதம் சிறப்பு பூஜை!
திமிரி அருகில் உள்ள வரகூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகடாக்ஷ பெருமாள் கோவிலில் 4-வது ஆண்டாக புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகடாக்ஷ பெருமாளுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூரம் மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மூலவருக்கு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா. என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி