திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமை ஜே. எல். ஈஸ்வரப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாம்பாக்கம், வாழைப்பந்தல், மேலப்பழந்தை, மேல்புதுப்பாக்கம், சொறையூர், இருங்கூர் உள் ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள், ராஜேந்திரன், முனுசாமி, தனபால், ஆனந்தன், அஞ்சலா பாலசுப்பிரமணி, சரவணன், மற்றும் துணைத் தலைவர்கள் நிர்மலா ஆறுமுகம், வினோத், உமா விஜயகுமார், பிரதாப், செல்வம், விநாயகம், ஊராட்சி செயலாளர்கள் நாராயணசாமி, தாமோதரன், முரளி, ரவிச்சந்திரன், மகேந்திரன், திருமால், குமரேசன், முத்து, முரளி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.