காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி மன்ற தலைவர் லதாநரசிம்மன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், 15-வது வார்டில் புதிதாக 5 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுத்தல், 10-வது வார்டில் உள்ள தெருக்களில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மன்ற உறுப்பினர் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தினர்.