ஆற்காடு தோப்பு கானா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை வழிபடுவதால், கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, செல்வச் செழிப்பு போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பூஜைகள் முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.