நெமிலி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வடிவேலு தலைமையில் நடைபெற்றது. தலைவர் வடிவேலு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஒன்றிய துணைத் தலைவர் தீனதயாளன் அறிவித்தார். இதையடுத்து, அதிமுக கவுன்சிலர் வினோத் குமார் மற்றும் பாமக கவுன்சிலர்கள் என மொத்தம் ஒன்பது கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.