ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தக்காம்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட பெல் மலைமேடு பகு தியை சேர்ந்த செல்வகுமார் (38) என்பவர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.