யோகா பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!

82பார்த்தது
யோகா பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!
அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் ஜோதி நகர் மனவளக்கலை மன்றம் இணைந்து அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆரோக்கிய பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான யோகா பயிற்சி கடந்த 12 நாட்களாக நடைபெற்றது. பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள துளசியம்மாள் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆர். பி. ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் பி. நரேந்திரகுமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழும செயலாளர் டி. எஸ். ரவிகுமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மனவளக்கலை மன்ற அறக் கட்டளை நிர்வாகியும், முன்னாள் ரோட்டரி சங்க தலைவருமான ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல் பி. இளங்கோ கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் களை வழங்கினார். நிகழ்ச்சியில் மனவளகலை மன்ற பேராசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி