விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகின்ற அக். 2ஆம் தேதி, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமிரி கிழக்கு ஒன்றியம், மற்றும் திமிரி பேரூராட்சியில், மகளிர் ஆலோசனைக் கூட்டம் நேற்று(செப்.23) நடைபெற்றது. திமிரி கிழக்கு ஒன்றியம் வாழைப்பந்தலில் நடைபெற்ற மகளிர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.