நெமிலி: வடமாநிலத் தொழிலாளர்கள் சாலை மறியல்

0பார்த்தது
நெமிலி: வடமாநிலத் தொழிலாளர்கள் சாலை மறியல்
நெமிலி அருகே திருமால்பூர், வேட்டாங்குளம், உளியநல்லூர், மகேந்திரவாடி வழியாக சென்னை-பெங்களூரு விரைவு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உளியநல்லூர் பகுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த சாலை பணிகளை செய்து வரும் தனியார் நிறுவனம் கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறி நேற்று 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து உளியநல்லூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் விரைந்து சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி