அரக்கோணம் தாலுகா பள்ளூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மாரி (62) என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக நெமிலி போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. நெமிலி போலீசார் மற்றும் பள்ளூர் வருவாய் ஆய்வாளர் விஏஓ ஆகியோர் இணைந்து மாரி வீட்டில் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து நெமிலி போலீசில் ஒப்படைத்தனர்.