ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லயன்ஸ் சங்கம் சார்பில் 257வது இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடந்தது. லயன்ஸ் சங்க மாவட்டம் முன்னாள் ஆளுநர் அரிதாஸ் தலைமை வகித்தார். ரயில்வே உயர் அதிகாரி தனேஷ் குமார் முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் லயன்ஸ் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் தமாக மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்காந்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் தரணி, ஒன்றிய தலைவர் தேவேந்திரன் கலந்துகொண்டனர்.