குன்னத்தூர்-நரசிங்கபுரம் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

63பார்த்தது
குன்னத்தூர்-நரசிங்கபுரம் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் -நரசிங்கபுரம் சாலை பழுதடைந்து மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று ஏ. எம். முனிரத்தினத்தினம் எம்.எல்.ஏ. விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

அதன் பேரில், முதல்வரின் கிராமசாலைத் திட்டத்தில் ரூ. 73 லட்சத்து 37 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெற்று, குன்னத்தூர் -நரசிங்கபுரம் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. ஏ. எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மின்னல் ஊராட்சி முன்னாள் தலைவர் வடிவேலு, காவேரிப்பாக்கம் ஒன்றியத் தலைவர் செல்வம், செங்கல்நத்தம் ஊராட்சித் தலைவர் தாமோதரன், கோவிந்தசேரி ரவி, குன்னத்தூர் கஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உதயகுமார், மோகன்குமார், ஒப்பந்ததாரர் பூபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி