கலவை அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றனர்
கலவை அருகே உள்ள நல்லூர் ஆதிதிராவிடர் பகுதி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவன் (வயது 55). தனியார் தோல் தொழிற் சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (50). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. நாடகம் பார்ப்பதற்காக தேவன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந் தார். நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
12 பவுன் நகை திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திரு டிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தேவன் கலவை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.