விருபாசிபுரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

554பார்த்தது
விருபாசிபுரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று பிற்பகல் விருபாட்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை நிறுத்தி வாகன ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர் ஸ்கூட்டரை திறந்து பார்த்தபோது அங்கு ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். 

அதில், அவர்கள் அரியூரை சேர்ந்த நம்பிராஜன் (வயது 49), விருப்பாட்சிபுரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் (32) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி ஸ்கூட்டரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 95 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி