குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தையொட்டி, வன எல்லையில் பட்டணத்துமலை என்ற மலை அமைந்துள்ளது. அங்குள்ள நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அந்த வழியே சிறுத்தை வந்ததாம். அப்போது பரந்தாமன் தான் வைத்திருந்த குடையை விரித்துக் காட்டினாராம். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம். இதுகுறித்த தகவலின்பேரில், பேர்ணாம்பட்டு வனத் துறையினா, வருவாய்த் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.