மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

1259பார்த்தது
மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
வேலூர் அடுத்த பெருமுகையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. மேலும் அந்த பகுதியில் சாலையை கடக்கும் பொதுமக்கள் வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வந்தது. பெருமுகை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வந்தனர். இதனால் பெருமுகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் கோரிக்கையை விடுத்தனர். அதன் பெயரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 15 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், பெருமுகையில் மேம்பாலம் அமைக்கும் பணியை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு தார்சாலம் அமைக்கப்படும் என்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி