தக்கோலம் பேரூராட்சி கூட்டம்!

64பார்த்தது
தக்கோலம் பேரூராட்சி கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் கோமளா, செயல் அலுவலர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். எழுத்தர் சொக்கலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாண்டியன், முகமது காசிம், கோபி, சாயிராபானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 15வது நிதி குழு மானியத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி