வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தது. பின்பு புனித கலச நீர் கொண்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதா வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அணைக்கட்டு
திமுக மத்திய ஒன்றிய செலயாளலர் வெங்கடேசன் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.