வேலூர் மாவட்டம் கஸ்பா அடுத்த ஆர். என் பாளையத்தில் உள்ள ஈத்கா தர்காவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜூன் 7) சிறப்பு தொழுகை நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.