வேலூர் மாவட்டம் மேல் மோனவூர் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் இதுவரை செய்து தரவில்லை என கூறி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பகுதி மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செய்து தரவில்லை எனவும் இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயற்சிதினார் அப்போது அந்த பகுதிக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினார் அதையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.