பள்ளிகொண்டா வாரச்சந்தை ரூ. 4½ லட்சத்திற்கு ஏலம்

68பார்த்தது
பள்ளிகொண்டா வாரச்சந்தை ரூ. 4½ லட்சத்திற்கு ஏலம்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையை ரூ. 1 கோடியே 35 லட்சத்தில் நவீனப்படுத்தினர். சந்தை நடத்துவதற்காக 2025-2026-ம் ஆண்டுக்கான ஏலம் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். ஏலம் கேட்க 30 பேர் தலா ரூ. 14 லட்சம் முன்பணம் கட்டி ஏலம் கேட்டனர்.

அதேப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டார். வேறுயாரும் ஏலம் கேட்காததால் ஜி. எஸ். டி. வரி உள்பட ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் கட்டினார். அதைத் தொடர்ந்து ஏலம் நடத்துவதற்கான ஆணையை பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி