வேலூர்: பாலீஷ் செய்வதாக கூறி 2 பவுன் அபேஸ்!

2946பார்த்தது
வேலூர்: பாலீஷ் செய்வதாக கூறி 2 பவுன் அபேஸ்!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (53). கணவரை இழந்த அவர் தோளப்பள்ளி கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் முன்பு இரு வாலிபர்கள் டிப்டாப் உடையில் நின்றிருந்தனர். அவர்கள் உமாரணியிடம் தங்க நகைகளில் அழுக்கை நீக்கி புதிய நகை போல் பாலீஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய உமாராணி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.

பின்னர் வாலிபர்கள் நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் இது குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் உமாராணி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி