வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்துச் செல்லும் கனிமங்களுக்கு மொத்த இசைவாணைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 21ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மாவட்டத்தில் உள்ள குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகையான கனிமங்களுக்கும் விண்ணப்பம் செய்து, நடைச்சீட்டு எனும் இ-பர்மிட் பெற்றுக் கொள்ள குவாரி குத்தகைதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.