பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

81பார்த்தது
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் ஜி. மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி. சூரியவேலு, பொருளாளர் ஜெ. உமாஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சிவராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தகுதியின் அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் சொந்த ஊரின் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி