வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆண்டு 234 திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் திருட்டுப்போன சொத்துகளின் மதிப்பு ரூ. 1 கோடியே 84 லட்சம். அதில் 212 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ. 1 கோடியே 30 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. 23 கொலை வழக்குகளில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். 2 வழக்குகளில் 2 பேருக்கு கோர்ட்டு ஆயுள்தண்டனை வழங்கியது. 5 கற்பழிப்பு வழக்குகளும், இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் இதர வழக்குகள் 69 பதிவாகி உள்ளது. அவற்றில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர், மது, சாராயம் விற்ற 44 பேர் உள் பட கடந்த ஆண்டு 119 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 455 பேர் மீது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. காணாமல் போனதாக வந்த 384 புகார்களில் 325 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.