எல்லையம்மன் கோவிலில் பெண்களிடம் நகை பறிப்பு!

81பார்த்தது
எல்லையம்மன் கோவிலில் பெண்களிடம் நகை பறிப்பு!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்துள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில்ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கனை பெற்றுக் கொண்டு உணவு சாப்பிடுவதற்காக பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். அப்போது 2 பெண்களிடம் 7 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை. எனினும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி