வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ராமாச்சாரி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது பசுமாடு வீட்டருகே உள்ள கிணற்றில் இன்று தவறுதலாக விழுந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.