வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஒடுகத்தூர் அடுத்த பிஞ்ச மந்தை அருகே உள்ள தேக்குமரத்தூர் மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது காட்டுக்கு நடுவே செல்லும் கானாற்று ஓடையில் சாராயம் காய்ச்சி வைத்திருந்த இரண்டு பேரல்கள் மற்றும் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல் ஆகியவற்றை கைப்பற்றி அளித்தனர். மேலும் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்காடு மலை கிராமத்தை சேர்ந்த தமிழ், பழனி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.