பொய்கை சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்!

157பார்த்தது
பொய்கை சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்!
வேலூர் மாவட்டம் பொய்கை சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.

உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி. கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் இன்று மட்டும் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி