எல்லையம்மன் கோவிலில் அமாவாசை மஹா பிரத்தியங்கிரா யாகம்!

77பார்த்தது
எல்லையம்மன் கோவிலில் அமாவாசை மஹா பிரத்தியங்கிரா யாகம்!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் சிறப்பு வைகாசி அமாவாசை மஹா பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம் நடைபெற்றது.

யாகத்தில் பயன்படுத்த 108 ஹோம பொருட்களும் 108 கிலோ மிளகாயும் 18 திரவியங்களும் நவ தானியங்களும் 18 லிட்டர் இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தப்பட்டது.

இத்திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் யாகங்கள் செய்து மனதார பிரார்த்தனை செய்து பயம், கடன் தொல்லை, பில்லி, சூன்யம், திருஷ்டி, ஏவல், வியாதி, கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் நீங்கவும் உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டியும் இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டனர்.

மிளகாய் வற்றல் யாகம் எனும் நிகும்பல யாகம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் வைகாசி அமாவாசையன்று நடந்த பிரத்தியங்கிரா நிகும்பலா யாகத்தில் மிளகாய் வற்றலை கொண்டு யாகம் நடைபெற்றது.

சாதாரணமாக ஒரு மிளகாய் வற்றலை தீயில் போட்டாலே நெடியின் வீரியம் தாங்க முடியாத அளவில் இருக்கும். ஆனால் இங்கு ஏராளமான அளவில் மிளகாய் வற்றலை கொட்டியும் சிறு கமறலோ நெடியோ வருவதில்லை என்பது ஆச்சர்யமான உண்மை இதை பார்ப்பதற்கு யாகத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி