மாமரங்களையும் முறித்து ஒற்றை யானை அட்டகாசம்

70பார்த்தது
மாமரங்களையும் முறித்து ஒற்றை யானை அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியான நாயன செருவு பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று அருகிலுள்ள தமிழக எல்லையான பேர்ணாம்பட்டு அருகே உள்ள பொதலகுண்டா பகுதியில் உள்ள ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து இரண்டு மாமரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தி அதிலிருந்து மாங்காய்களை ருசித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து பாஸ்மார் பெண்டா கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து மூன்று மாமரங்களை முறித்து சுமார் அரை டன் மாங்காய்களை சேதப்படுத்தி உள்ளது. இதனை அறிந்த வனவர் முரளி வனக்காப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர். காட்டு யானைகள் அட்டகாசத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி