வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வேலங்காடு பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (68). இவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகளுக்கு உணவளிக்க கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது அடுப்பில் கஞ்சியை வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்றவர் நீண்ட நேரமாக அங்கேயே பணியில் இருந்துள்ளார்.
பணியை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது எதிர்பாராத விதமாக மாட்டுக்கு கஞ்சி காய்ச்ச வைத்திருந்த தீ அருகே இருந்த புளிய மரத்திற்கு பரவி தீகொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது.
இதனை கண்ட அவர் உடனடியாக அணைக்கட்டு காவல் நிலையத்திற்கும் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் மற்றும் வேலூர் தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர். மாட்டு கொட்டைகளுக்குள் மாடுகளும் மற்றும் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.