கஞ்சா, குட்கா விற்பனை செய்த 338 பேர் கைது!

52பார்த்தது
கஞ்சா, குட்கா விற்பனை செய்த 338 பேர் கைது!
வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 765 லிட்டர் சாராய ஊறல், 11, 821 லிட்டர் சாராயம், 16, 361 மதுபாட்டில்கள் மற்றும் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 5 ஆயிரம் கிலோ வெல்லம், 650 கிலோ வேலம்பட்டை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 58 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1, 926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சிய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் 19 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 144 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 13 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் 1, 868 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 183 கிலோ குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி