திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்பட்டு வரும் காலணி தொழிற்சாலை பெண் பணியாளர்களை ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்று கடம்பூர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த ஹேமாவதி என்பவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.