திருப்பத்தூர்: நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ, சேர்மன்
மாதனூர் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மழையினால் இடிந்து விழுந்த வீட்டினை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயனோடு மாதனூர் சேர்மன் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியினை அளித்தார். உடன் து. தலைவர் சாந்தி சீனிவாசன், ஊராட்சி தலைவர் சுவிதா கணேஷ், அரசு அலுவலர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.