ஆம்பூரில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சாலை இல்லை அவதி.

58பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே தனது மாமியார் வீடான காட்டுகொல்லை பகுதிக்கு குடிப்பெயர்ந்து அங்கேயே வசித்து வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி திடீரென்று நேற்றிரவு உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் உடலை இன்று அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள கிளை ஆற்றின் அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லும்போது சாலை வசதி இல்லாமல் கிளை ஆற்றில் செல்லும் வெள்ளத்தில் இறங்கி இறந்தவரின் உடலை சுமந்து செல்ல கூடிய அவல நிலை ஏற்பட்டது.

மேலும் கிளையாற்றின் அருகில் இருந்த மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்ததால் இரவு நேரத்தில் தண்ணீரை அப்புறப்படுத்திய பின்னர் சடலத்தை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது

கிராமத்திற்கு மயான வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற அவல் நிலை ஏற்படுவதாகவும் அரசு உரிய மயான இடம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி