புதிய நீதி கட்சியின் தலைவரும் ராஜராஜேஸ்வரி கல்வி குழுமத்தின் தலைவருமான ஏ. சி சண்முகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சுமார் 850 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உடல் பரிசோதனை மருந்து மற்றும் கண்ணாடி ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் -
அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இருந்து
பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தல்களை சந்தித்து வருகிறோம். ,
தற்போதய
பிரதமர் மோடி அவர்களை பல்வேறு விசயங்களில் உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வருகிறது. இதனை G20 மாநாட்டை பார்த்தாலே நாம் தெரிந்து கொள்ள முடியும்.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஐ. என். டி. ஏ கூட்டணியில் யார்
பிரதமர் வேட்பாளர் என்பதை தெரிவித்தாலே அவர்களுக்குள் கூட்டணிப் பிளவு ஏற்பட்டு விடும் தேர்தலுக்கு பிறகு தெரிவிப்போம் என தெரிவிப்பார்கள் ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட அவர்களால் முடிவெடுக்க முடியாது.
நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடர்ந்து பயணிக்கும் என்று தெரிவித்தார்.